தமிழகம்

அசத்தலான பொங்கல் பரிசு! எப்பொழுது கிடைக்கிறது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!

Summary:

Pongal gift given by tamilnadu government next week

oதமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் அடுத்த மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை வழங்கி வருகிறது. 

 இவ்வாறு கடந்த ஆண்டு அனைத்து தமிழக மக்களுக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உட்பட அனைத்து பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் அதனுடன் பொங்கல் பரிசு தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. இவ்வாறு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழக மக்களுக்கு அரசு பரிசுத் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை வழங்க உள்ளது.

இதன்படி தமிழகம் முழுவதும் 2 கோடி ரேசன் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பரிசுகள் வருகிற 20-ந்தேதி முதல் 25ந் தேதிக்குள் அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஊராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டமாக நடக்க உள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க எந்த தடையும்  இல்லை என கூறப்படுகிறது.

 


Advertisement