மனைவியை மானபங்கம் செய்த மதுபோதை கும்பல்.. பழிக்குப்பழியாக கணவன் பகீர் செயல்..!

மனைவியை மானபங்கம் செய்த மதுபோதை கும்பல்.. பழிக்குப்பழியாக கணவன் பகீர் செயல்..!


Pondicherry Woman Sexual Harassment by Drunken Gang Husband Take Revenge Against Gang

தனது மனைவியை மதுபோதையில் 3 பேர் கொண்ட கும்பல் மானபங்கம் செய்ய, கணவன் தனது நண்பர்களுடன் பழிவாங்க எடுத்த நடவடிக்கை சண்டையில் முடிந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முருங்கப்பாக்கம் அரசு குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் தினேஷ். இவர் டி.வி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நந்தினி (வயது 28). சம்பவத்தன்று, நந்தினி மற்றும் பக்கத்து வீட்டினை சார்ந்த பெண் அங்காளம்மன் நகரில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். 

அப்போது, எதிர்வீட்டினை சார்ந்த விவேக் (வயது 24), ஜில்பர், விஸ்வா ஆகியோர் மதுபோதையில் நந்தினியை இடிப்பது போல வந்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட நந்தினி விவேகத்தை தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விவேக் ஆபாசமாக திட்டவே, அவரது நண்பர்கள் சேர்ந்து நந்தினியை மானபங்கப்படுத்தியுள்ளனர்.

இருவரும் அங்கிருந்து செல்ல முயன்ற போதிலும், விவேக் அவர்களை வழிமறித்து கொலை செய்திடுவதாக மிரட்டி சென்றுள்ளார். இதுகுறித்து நந்தினி தனது கணவர் தினேஷிடம் முறையிட, ஆத்திரமடைந்த தினேஷ் விவேக்கை ஆபாசமாக திட்டி தாக்கி இருக்கிறார். இதனை அறிந்த விவேக்கின் தாய் தினேஷிடம் இருந்து மகனை மீட்டு வந்துள்ளார். 

Pondicherry

அன்றைய தினத்தின் இரவில் தினேஷ் மற்றும் தவழகுப்பம் பகுதியை சார்ந்த விஷ்ணு (வயது 30), ரஞ்சித் ஆகிய 3 பேர் சேர்ந்து விவேக்கின் வீட்டில் நுழைந்து அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதனை விவேக்கின் சகோதரிகள் தடுக்க முயற்சித்தும் பலனில்லை. விவேக்கின் சகோதரியான வித்தியாவை கும்பல் மானபங்கம் செய்துள்ளது.

விவேக்கை அடித்து நொறுக்கிய கும்பல், வீட்டின் பின்புறம் இருக்கும் ஆற்றில் அவரை வீசி சென்றுள்ளது. விவேக்கின் மற்றொரு சகோதரியான அமுதாவுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.