தமிழகம்

அடக்கொடுமையே இதற்காகவா? திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர்! வெளியான பகீர் காரணம்!

Summary:

Policeman commits suicide for problem with wife

சென்னை தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வைரமுத்து. இவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். வைரமுத்துவின் மனைவி அமலாபுஷ்பம். இந்த தம்பதியினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குழந்தைக்கு இருவரும் தனியாக பெயரை தேர்வு செய்து வைத்துள்ளனர். மேலும் பெயர் வைப்பதில் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இரவு பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிய வைரமுத்து தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார்.மேலும் நீண்ட நேரமாகியும் அவர் அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள் கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்துள்ளனர். ஆனால் அவர் கதவைத் திறக்கவில்லை.

 இந்நிலையில் பதறிப்போன அவர்கள் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு வைரமுத்து தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையும். மேற்கொண்டு வருகின்றனர்


Advertisement