சீருடையுடன் பாத்ரூமிலிருந்து காவலர் வெளியிட்ட வீடியோ..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.

Police singing corono awareness song video goes viral


Police singing corono awareness song video goes viral

கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாக சீருடையுடன் காவலர் ஒருவர் பாத்ரூமில் இருந்து பாடி வெளியிட்டுள்ள வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதேநேரம் மக்கள் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.

corono

இருப்பினும், ஏதாவது சில காரணங்களால் சிலர் வீட்டை விட்டு வெளியரும் சூழல் வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலையே இருந்து அரசுக்கு உதவும்படியும், கொரோனா பரவலை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகிறது.

இந்நிலையில், காவலர் ஒருவர் சீருடையுடன் பாத்ரூமில் நின்று கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அயராத பணிக்கு நடுவிலும் வீடியோ வெளியிட்ட காவலரை மக்கள் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.