புத்தாண்டை கொண்டாட காவல்துறை புது கட்டுப்பாடு! மீறினால் கடும் நடவடிக்கை!

புத்தாண்டை கொண்டாட காவல்துறை புது கட்டுப்பாடு! மீறினால் கடும் நடவடிக்கை!


police-new-rules-for-celebrating-new-year-2019

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி கொண்டிருக்கிறது. வண்ண வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள், புது உடை, இனிப்பு, மகிழ்ச்சி என உலகமே புத்தாண்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் ஐந்து நாட்களில் 2018 ஆம் ஆண்டு நிறைவடைந்து புது ஆண்டு 2019 பிறக்க உள்ளது. ஒவொரு வருடமும் புத்தாண்டு தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

new year

சில வருடங்களுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக போடப்பட்ட மேடை உடைந்து பல உயிர்கள் மறைந்தன. அதேபோல பல்வேறு காரணங்களால் பல்வேறு உயிர் பறிபோவது வழக்கமாகிவிட்டது.

அந்தவகையில் விபத்துகளை குறைப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் தமிழக காவல் துறை இந்த வருடம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

1 . நள்ளிரவு 1மணி உடன் கொண்டாட்டத்தை முடித்து கொள்ள வேண்டும். இரவு 
2 . அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
3 . அதேபோல நீச்சல் குளத்தின் மேலோ அல்லது அருகிலே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான  மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து அனைவரும் இதை கடைபிடிக்கவும். பாதுக்கப்புடன் இருப்போம், மலர இருக்கும் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம். வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.