தமிழகம்

பிறந்த ஐந்து நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த தாய்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

Summary:

பிறந்த ஐந்து நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த தாய்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

பிறந்த ஐந்து நாட்களேயான ஆண் குழந்தையை விற்பனை செய்த தாயிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் அடுத்த சத்தரை பகுதியில் வசித்து வருபவர்கள் நம்பிராஜன்-சந்திரா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

தொடர்ந்து சந்திராவின் கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், போதிய வருமானம் இல்லாததால் சந்திரா ஸ்ரீ பெருமந்தூர் பேரூராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புரவு பணி செய்து வந்துள்ளார்.இந்த நிலையில், இவருக்கு முன்பே இரண்டு குழந்தைகள் உள்ளதால், மூன்றாவதாக தனக்கு பிறந்த ஆண் குழந்தையை, தன் வீட்டிற்கு தெரியாமல் அவருடன் பணியாற்றி வரும் ஜெயந்தி என்பவருக்கு 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக மப்பேடு காவல்துறையினருக்கு தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜெயந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர். அத்துடன் பெற்ற குழந்தையை விற்பனை செய்ததற்காக சந்திராவிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement