தமிழகம்

உல்லாசமாக இருந்துவிட்டு கர்ப்பிணி பெண்ணை கழட்டிவிட்ட காதலன்..! நான்கு மாத கற்பதோடு காவல் நிலையத்தில் நடந்த கல்யாணம்.!

Summary:

Police held marriage in police station near pudukottai

திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம் பெண்ணை கற்பமாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் தேடி கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அடுத்து உள்ள சேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரும் அதேபகுதியில் உள்ள வடக்குப்படி கிராமத்தை சேர்ந்த புனிதா என்ற பெண்ணும் கடந்த சிலவருடங்களாக காதலித்துவந்தநிலையில், இருவரும் தனிமையில் உல்லாசமாக இந்தநிலையில் புனிதா நான்கு மாதம் கற்பமாகியுள்ளார்.

இதனை அடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி புனிதா பிரபுவிடம் கேட்க, அவர் தனது பெற்றோரிடம் விவரத்தை கூற பிரபுவின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பிரபுவும் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், புனிதா நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்திலும், வடகாடு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

இதனை அடுத்து கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பிரபுவை போலீசார் அவரது நண்பர் வீட்டில் வைத்து கைது செய்தனர். இதனை அடுத்து பிரபு புனிதாவைத் திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டார். பின்னர் இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் பிரபுவுக்கும் - புனிதாவுக்கும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் திருமணம் செய்துவைத்து அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.


Advertisement