சென்னையில் பரபரப்பு... போதை மாத்திரை கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்.!! கூலி பட நடிகர்கள் கைது.!!



police-busted-gang-for-selling-narcotic-pills-coolie-ac

சென்னையில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சினிமா நடனக் கலைஞர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அசோக் நகர் பகுதியில் சினிமா பிரபலங்களிடையே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் சினிமா நடன கலைஞர் பிரவீன்(27) மற்றும் அவரது நண்பர்கள் 11 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

tamilnadu

இதில் பிரவீன் மற்றும் அவரது நண்பர்களிடமிருந்து மெத்தப்பட்டமைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பெருமளவில் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது போதை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதை மருந்து விற்பனையில் கைது செய்யப்பட்ட நபர்கள் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடித்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு... கட்டுகட்டாக பணம், போதை மாத்திரைகள்.!! 7 பேர் கும்பல் கைது.!!

இதையும் படிங்க: தலை எங்கே...? தோப்பில் கிடந்த சடலம்.!! காவல் துறை தீவிர விசாரணை.!!