ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
நெல்லையில் பயங்கரம்... ரயில் நிலையம் வந்த இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்.!! 2 சிறுவர்கள் கைது.!!
திருநெல்வேலியில் நண்பனை சென்னைக்கு ரயில் ஏற்றி விடுவதற்காக வந்த இளைஞரை 2 சிறுவர்கள் மது பாட்டிலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலடி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். 28 வயதான இவர் தனது நண்பனை சென்னைக்கு ரயில் ஏற்றி விடுவதற்காக திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது நண்பன் புறப்பட்டு சென்றதும் ரயில் நிலையம் அருகேயுள்ள கடையில் உணவருந்தி இருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் காகிதம் எடுத்து விற்பனை செய்யும் சிறுவர்களுக்கும் மனோஜ் குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அப்பகுதியில் கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து மனோஜ் குமாரின் வயிற்றில் குத்தி இருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த மனோஜ் குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மது விற்ற மூதாட்டி சிறையில் மர்ம மரணம்... காவல்துறை விசாரணை.!!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் பாட்டிலால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சமீப காலமாக திருநெல்வேலி பகுதியில் அதிகரித்து வரும் வன்முறை மக்களை அச்சமடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!