மது விற்ற மூதாட்டி சிறையில் மர்ம மரணம்... காவல்துறை விசாரணை.!!



bootlegger-lady-died-in-prison-police-investigation

வேலூர் பெண்கள் தனி சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 13 ஆம் தேதி பிளாக்கில் மது விற்றது தொடர்பாக எல்லம்மாள் என்ற 63 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.

tamilnadu

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறை அதிகாரிகள் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்லாம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாகாயம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "இதுக்கு ஒரு முடிவே இல்லையா.." தெரு நாய்களால் பறி போன உயிர்.!! 18 வயதில் இளைஞர் பலி.!!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!