கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய தம்பதி.! போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி.?

கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய தம்பதி.! போலீசாரிடம் வசமாக சிக்கியது எப்படி.?



police-arrested-hen-and-goat-theft

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் போதியம்மன் கோவில் பகுதியில் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த இரண்டு ஆடுகளை ஒரு காரில் வந்த தம்பதிகள் திருடி காரில் ஏற்றி சென்றது சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, சென்னை கொரட்டூரை அடுத்த பாடி வள்ளலார் தெருவில் கோழி இறைச்சி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள் திருட்டுபோனதாக கொரட்டூர் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து போலீசார் அந்த இறைச்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சியில், சொகுசு காரில் வந்த நபர் ஒருவர் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் கூட்டின் பூட்டை உடைத்துவிட்டுஅதில் இருந்த கோழிகளை திருடி காரின் பின்இருக்கையில் போடுவதும், அவருக்கு  இளம்பெண் உதவி செய்வதும் பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கொரட்டூர் பகுதியில் நேற்றுமுன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, திருட்டில் ஈடுபட்ட கார் அந்த வழியாக வந்தது. அதை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் ஒரு ஆணும், கைக்குழந்தையுடன் பெண்ணும் இருந்தனர். விசாரணையில், ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த அஷ்ரப் (38), அவரது மனைவி லட்சுமி (36)  என்பதும் தெரியவந்தது.

விசாரணையில், ஊரடங்கு சமயத்தில் இவர்கள் இருவரும் இவ்வாறு சொகுசு காரில் சென்று 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை திருடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க கைக்குழந்தை மற்றும் சொகுசு காரில் வந்து திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.