ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
சென்னையில் பரபரப்பு... "செல்போனில் பெண்கள், சிறுமிகளின் ஆபாச படம்..." வட மாநில இளைஞர் கைது.!!
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் வைத்திருந்த வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் சிறுமியின் ஆபாச படம்
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் தனியார் குடியிருப்பில் தங்கியிருக்கும் வடமாநில இளைஞர் ஒருவர் தனது செல்போனில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வைத்திருக்கிறார். அந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்து விசாரித்தனர்.

செல்போன் முழுவதும் ஆபாச படங்கள்
மேலும் அவரிடமிருந்த செல்போனை கைப்பற்றி பரிசோதனை செய்ததில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை எடுத்து அவற்றை ஆபாசமாக சித்தரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: "வா கட்டிக்கலாம்..." திருமண ஆசை காட்டி சிறுமி கற்பழிப்பு.!! வாலிபர் மீது போக்சோ வழக்கு.!!
போலீஸ் விசாரணை
இதனையடுத்து அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் அனில் என்றும் கொருக்குப்பேட்டையில் தங்கியிருந்து அப்பகுதியில் சமோசா வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த நபர் பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் விற்பனை செய்கிறாரா.? அல்லது பாலியல் சைக்கோவா.? என்ற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "ஜூஸில் போதை மருந்து..." பள்ளி மாணவர்கள் பலாத்காரம்.!! இளைஞர் கைது.!!