ஒரு பெண் மீது மணி, அஜித் இருவருக்கும் ஆசை.! ஆனால் பெற்றோர் எடுத்த அந்த முடிவு.! காட்டுக்குள் நடந்த கொடூரம்.



Police arrested a man who killed his friend for love issue

திண்டுக்கல் அருகே மது போதையில் நண்பனை கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் அஜித். இருவரும் அதே பகுதியில் உள்ள வெல்டிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். மணிகண்டன் அஜித் இருவரும் ஒரே பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணை மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சேர்ந்து முடிவு செய்துள்ளனர். தான் காதலித்த பெண்ணை மணிகண்டன் திருமணம் செய்து கொள்ளப் போவதை ஏற்றுக்கொள்ள முடியாத அஜித் மணிகண்டத்தினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

Crime

இதனை அடுத்து அஜீத் தனது மற்றொரு நண்பருடன் சேர்ந்து மணிகண்டனை அழைத்து கொண்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அஜீத் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து மது அருந்திய பாட்டிலை உடைத்து மணிகண்டனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

மணிகண்டனை கொலை செய்த நிலையில் ரத்தம் படிந்த கரையுடன் அஜித் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்ததைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை பிடித்து வைத்து அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஒரே பெண்ணை இருவர் காதலித்து நிலையில் சக நண்பனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.