ஊரடங்கு சமயத்தில் புதுக்கோட்டையில் சாராய மோகம்! ஒரே நாளில் போலீசாரின் வேட்டையில் சிக்கிய 13 பேர்!

ஊரடங்கு சமயத்தில் புதுக்கோட்டையில் சாராய மோகம்! ஒரே நாளில் போலீசாரின் வேட்டையில் சிக்கிய 13 பேர்!



Police arrested 13 people for alcohol

கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இந்தியாவில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதலே மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆனாலும் ஆங்கங்கே திருட்டுத்தனமாக மதுக்கள் விற்கப்பட்டதை போலீசார் கட்டுப்படுத்தினர். ஆனாலும் கொரோனாவையும் மதிக்காத சில கயவர்கள் கள்ளச்சாராயம் எரித்து விற்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் பகுதியில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஊறலை அழித்தனர். மேலும், அப்பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரை கைது செய்தனர்.

arrest

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கல்லுப்பட்டி, கறம்பக்குடி அருகே உள்ள பட்டத்திகாடு மற்றும் ஆலங்குடி பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரித்தவர்கள் மற்றும் விற்றவர்களை அதிரடியாக வேட்டையாடி பிடித்தனர் போலீசார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இது தொடர்பாக ஒரே நாளில் 13 நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். அவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.