
Police arrest sarkar director AR murugadhas
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்க்காருக்கு எதிரேக்கா அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இயக்குனர், தயாரிப்பாளர், விஜய் என அனைவர் மீதும் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று இரவு இயக்குனர் முருகதாஸை போலீசார் கைதுசெய்ய அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் முருகதாஸ் வீட்டில் அவரை பற்றி விசாரித்த போலீசார் முருகதாஸ் வீட்டில் இல்லை என்று தெரிந்தபின்பு அவரது வீட்டில் இருந்து கிளம்பியதாகவும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றதாகவும், முருகதாஸை கைதுசெய்ய நாங்கள் செலவில்லை என்றும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
BREAKING NEWS : Police reach Director A.R.Murugadoss residence to arrest him.
— Sun Pictures (@sunpictures) November 8, 2018
After enquiring about A.R.Murugadoss’ whereabouts police have left his residence since he was not there.
— Sun Pictures (@sunpictures) November 8, 2018
Advertisement
Advertisement