பள்ளி உணவில் விஷம் கலந்ததால் அதிர்ச்சி.. 51 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆசிரியர்!



Poison mix school food in Sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட காலை உணவு சாம்பாரில் விஷம் கலந்ததாக எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசுப் பள்ளியில் சமையல் பணியில் ஈடுபட்டு வந்த தனது மனைவி அந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், பழிவாங்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த காலை உணவு சாம்பாரில் விஷம் கலந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

erode

குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதற்கு முன்பாக, பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் சாம்பாரை ருசி பார்த்துள்ளார். அப்போது சாம்பாரின் சுவையில் மாற்றம் இருப்பதை உணர்ந்த அவர், சந்தேகமடைந்துள்ளார். இதையடுத்து அந்த சாம்பாரை மாணவர்களுக்கு வழங்காமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் இருந்த 51 குழந்தைகள் விஷம் கலந்த உணவை சாப்பிடுவதிலிருந்து தப்பினர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலன் வீட்டு முன்பு கள்ளக்காதலி கொலை.. அரங்கேறிய வெறிச்செயல்.. பதறிய பொதுமக்கள்.. ஈரோட்டில் சோகம்.! 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த சாம்பாரில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

erode

ஆசிரியர் சரியான நேரத்தில் சாம்பாரை ருசி பார்த்து, அதில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டறிந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 51 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆசிரியரின் துரிதமான நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. 35 வயது இளைஞரின் பதறவைக்கும் செயல்.!