தமிழகம்

மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி..! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

PM Modi wishes madurai barber for helping people

மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மதுரை உள்ள சலூன் கடைக்காரர் ஒருவரை பாராட்டி பேசியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட நான்காம்கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும்நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளைமுதல் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்நிலையில் மான் கீ பாத் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாக பேசிய பிரதமர் மோடி ஊரடங்கு சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த சாதாரண மக்கள் குறித்து பேசினார்.

அப்போது மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கள் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார். இதன்காரணமாக மோகனுக்கு என்னுடைய பாராட்டுகள் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார் பிரதமர் மோடி.


Advertisement