அரசு பள்ளிகளில் 632 சிறப்பாசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அரசு பள்ளிகளில் 632 சிறப்பாசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!



physical-education-teacher---high-court

632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2017 ஜூலை 26ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியாகி செப்டம்பர் 23 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

gvt school

இந்த எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் ஆனது அக்டோபர் 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த தேர்வு பட்டியலில் இடம்பெற்றவர்களின் கல்வித் தகுதி குறித்து விரிவான தகவல் இடம்பெறவில்லை என்பது தொடர்பாக ஒரு தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி தேர்வு செய்யப்பட்டவர்களின் தேர்வு பட்டியலை ரத்து செய்து இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

gvt school

இந்நிலையில் இவ்வழக்கு சம்பந்தமான விசாரணை இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன்  நீதிபதி சுந்தர் அடங்கிய நீதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட 632 பேருக்கு இன்னும் 4 வாரங்களில் பணி வழங்க வேண்டும் என்றும் அவர்களின் கல்வித்தகுதி குறித்த விசாரணைக்கு ஒரு தனி குழு அமைக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.