தமிழகம்

உயிரிழந்து சடலமாக கிடப்பதாக கூறப்பட்ட நபர்! அருகில் சென்ற போட்டோகிராபருக்கு தெரியவந்த ஆச்சர்ய உண்மை!

Summary:

Photographer found deadman is alive

கேரளா பாலக்காட்டில் வசித்து வந்தவர் சிவதாசன். இவர் கமலச்சேரி என்ற இடத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவதாசனின் நண்பர் ஒருவர் அவரை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டினுள்ளே மூச்சுபேச்சின்றி கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு அவர் இறந்து விட்டதாக எண்ணியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, போலீசார்கள் இறந்ததாக கூறப்பட்ட சிவதாசனை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர் டோனி தாமஸ் என்பவரை அங்கு வரவழைத்துள்ளனர். அப்பொழுது அவர் புகைப்படம் எடுக்க சிவதாசன் அருகே சென்ற போது சிறிய முனகல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் சிவதாசன் இறக்கவில்லை உயிருடன் இருக்கிறார் என்பதை போலீசாரிடம் கூறியுள்ளார்.

உடனே அவர்கள் விரைந்து சிவதாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement