விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
சூட்டிங் முடிந்து திரும்பியபோது நடந்த கோர விபத்து! போட்டோகிராபர் பலி; குணச்சித்திர நடிகர் காயம்

தேனி மாவட்டம் கோம்பை அருகே நேற்று நடைபெற்ற கோர விபத்தில் சினிமா போட்டோகிராஃபர் சிவா பலியானார். உடன் சென்ற குணச்சித்திர நடிகர் மீசை தவசி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அஜித்குமார் நடித்த 'அவள் வருவாளா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் தற்போது ஊர் மரியாதை என்னும் டிவி சீரியல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த சீரியலில் போட்டோகிராபராக சிவா என்பவர் பணியாற்றி வருகிறார், மேலும் பல சினிமாக்களில் குணச்சித்திர நடிகராக தோன்றியுள்ள மீசை தவசி இந்தத் தொடரில் நடித்துவருகிறார்.
இந்த தொடரின் படப்பிடிப்பு நேற்று மாலை தேனி மாவட்டம் கோம்பை எத்தனை கிலோமீட்டர் மலையடிவார திருமலை ராய பெருமாள் கோவில் பகுதியில் நடந்தது. நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் உறுப்பினர் அனைவரும் உத்தமபாளையம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது போட்டோகிராபர் ஜீவா மற்றும் குணசித்திர நடிகர் மீசை தவசி இருவர் மட்டும் தனியாக ஒரு காரில் சென்றுள்ளனர். இரட்டைபுளி ஓடை பகுதியில் நிலை தடுமாறி, அருகில் உள்ள தோட்டத்தில் கார் கவிழ்ந்ததில் சிவா உயிரிழந்தார். தவசி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.