ஆத்தாடி இனிமேல் தாங்காது... பெட்ரோல், டீசல் விலை உச்சகட்ட உயர்வு.! தலையில் துண்டை போடும் வாகன ஓட்டிகள்.!petrol diesel price increased

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப,  இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 18 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பலர் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்து பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணம் செய்து வருகின்றனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உச்சகட்ட உயர்வால் வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.