இது எங்கே போயிட்டு முடிய போகுதோ.! பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு.! பேரதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!petrol diesel price increased

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் வெளியூரில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியில்லாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 

பொதுமக்கள் அவதிப்பட்டுவரும் இந்த சூழ்நிலையிலும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. 

petrol

இந்தநிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.91.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.