#பெரம்பலூர் : திருமண நிகழ்ச்சியில் திடீரென நடந்த சம்பவம், உயிரை பறிகொடுத்த சமையல்காரர்.!perambalur marriage cook died by fire

திருமண நிகழ்ச்சியில் தீ பற்றி எரிந்ததில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிக்காடு பகுதியில் அமைந்துள்ள பள்ளி வாசலில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சமைக்கும் பணியில் மக்புல் பாஷா என்ற 45 வயது நபர் ஈடுபட்டுள்ளார். 

Perambalur

அவர் சமைக்கும் பொது அவர் அணிந்திருந்த உடை(லுங்கி)யில் திடீரென தீ பற்றியது. இதனால், உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

Perambalur

அங்கே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மக்புல் பாஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.