14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மற்றும் சித்தப்பா!. சிறுமியின் குமுறல்!.

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயதுச் சிறுமி ஒருவர் மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில் கடந்த 3 ஆண்டுகளாக எனது தந்தையும், இரண்டு சித்தப்பாவும் எனக்கு தொடர்ந்து பாலியல் கொடுத்து வந்தனர் என புகார் அளித்துள்ளார்.
சிறுமி புகார் அழைத்தவுடன் அவரது தந்தை, சித்தப்பா என இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பராமரிப்பில் காப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்