கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்! பிள்ளைகளுக்கு தந்தையே முடிவெட்டும் சூழ்நிலை!



parents-hair-cut-to-child

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு உச்சத்துக்குச் சென்றுள்ளது. சென்னையில் 400க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளன. 

தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்ததில் இருந்தே, தென் மவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பினர். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்யாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.  

Hair cut

கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகளும் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன.  இந்த சூழலில் பள்ளிகுழந்தைகளை வீட்டில் சமாளிப்பதே பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.  ஒரு மாதங்களுக்கு மேலாக சலூன் கடைகள் மூடப்பட்டதால், சிறுவர்களுக்கு தலைமுடி அதிகமாக வளர்ந்து, கோடை நேரத்தில் சிறுவர்களுள்க்கு வியர்வை அதிகமாக வருகிறது. 

இந்தநிலையில் குழந்தைகளுக்கு தந்தையே முடிவெட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.  பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் ஷேவிங் செய்யும் மெஷினை வைத்து குழந்தைகளுக்கு முடியை திருத்தம் செய்கின்றனர். வயதானவர்கள் முடி வெட்ட முடியாமலும் சிரமப்படுகின்றனர். ஆனாலும் கொரோனா காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம். எனவே வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து கொரோனாவை விரட்டுவோம்.