5 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் - தந்தை தற்கொலை.. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் விபரீத முடிவு.!

5 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் - தந்தை தற்கொலை.. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் விபரீத முடிவு.!


Parents dead in Krishnagiri

தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெற்றோர் எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்புறமுள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ஹைதர் அலி (வயது 45). இவரின் மனைவி ஷானுமா (வயது 40). தம்பதிகளுக்கு 4 பெண் குழந்தைகள், ஒரு மகன் இருக்கின்றனர். கணவன் - மனைவி பை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர்.  

இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் தம்பதிகள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஹைதர் அலி பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதனைக்கண்ட குழந்தைகள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். 

Crime

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வேப்பனஹள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தம்பதிகள் குடும்ப சண்டையால் தற்கொலை செய்தனரா? கடன் நெருக்கடியால் தற்கொலை செய்தனரா? என்ற விபரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர். 5 குழந்தைகளையும் விட்டுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சோகம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.