"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
பல கனவுகளுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த இளம்பெண்.. திருமணமான இரண்டே மாதத்தில் நிகழ்ந்த சோகம்.!
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு மங்களம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது. தமிழரசன் பால் வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். திருமணமாகி பல கனவுகளுடன் கணவன் வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினிக்கு அதன்பிறகு தான் தமிழகரன் மடா குடிகாரன் என்று தெரியவந்துள்ளது.
தினமும் குடித்து விட்டு வரும் தமிழரசன் தனது புதுமனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதேபோல் சனிக்கிழமை மதியம் நன்கு குடித்து விட்டு வந்த தமிழரசன், தனது மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது,கழுத்தை நெரித்து பிரியதர்ஷினியை, தமிழரசன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்துள்ளனர்.திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் கணவனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.