அரசியல் தமிழகம்

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் ஓபிஎஸ் மகன்; தொண்டர்கள் உற்சாகம்.!

Summary:

ops son raventhiranath kumar - naminate cantidate

எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் துணை முதல்வர் ஓபிஎஸ்ன் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக பதவி வகித்தவர். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அப்பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

அதற்கு அரசியல் எதிரிகள் தான் காரணம் என்று ஓபிஎஸ் தரப்பில் அப்போது சொல்லப்பட்டது. அதன் பிறகு மீண்டும் புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளராக நியமித்திருந்தார் ஜெயலலிதா.

தற்போது 39 வயதாகும் ரவீந்திரநாத் குமார் சிறுவயது முதலே கட்சிப் பணியில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி விருதுநகர் தொகுதிகளில் இவர் போட்டியிடுவார் என தெரிகிறது. இதனால் ஓபிஎஸ்ன் ஆதரவாளர்களும் அதிமுக தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.
 


Advertisement