கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: ஓ.பி.எஸ் உருக்கம்..!

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: ஓ.பி.எஸ் உருக்கம்..!



ops expressed his condolences to the families of the victims of the firecracker factory blast

கடலூர் அருகேயுள்ள எம்.புதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டம், கடலூர் N.T, கேப்பர் மலை அருகேயுள்ள எம்.புதூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒரு பெண் உட்பட 5 பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார், இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

Fire Cracker

கடலூர் மாவட்டம் - எம்.புதூர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு, காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய நிவாரண உதவியை வழங்கவும், அடிக்கடி நடைபெறும் பட்டாசு விபத்தினைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.