பள்ளி மாணவியுடன் காதல்.. சிறுமியை தேடி வந்த காதலன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்.! 



Ooty: 20-Year-Old Man Arrested Under POCSO Act After 10th Class Student Goes Missing

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோவில் சிக்கினார். 

சமூக வலைதளபழக்கம்: 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 20). இவர் இளங்கலை பொருளாதாரம் பயின்று வந்துள்ளார். பின் கல்லூரி படிப்பை இடைநிறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 10 ம் வகுப்பு மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 7 பேரால் 13 வயது சிறுமி பலாத்காரம்.. சகோதரர், காதலன் என பீர் குடிக்கவைத்து நேர்ந்த கொடுமை.. சேலத்தில் பேரதிர்ச்சி.! 

நட்பு - காதல்: 

இருவரும் நீண்ட மாதங்களாக நட்பாக பழகி வந்த நிலையில், நாகராஜ் மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். ஒருகட்டத்தில் நேரில் சந்தித்துக்கொண்ட காதல் ஜோடி, ஊட்டியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளது. இதனிடையே, மாணவி சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமாகினார். 

sexual abuse

விசாரணை: 

இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர் ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தபோது, நகராஜுடன் பழகி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது, ஊட்டியில் இருக்கும் தனியார் விடுதியில் இருப்பது உறுதியானது. 

கைது: 

பின் தனியார் விடுதிக்கு நேரில் சென்ற அதிகாரிகள், அறையில் மாணவியுடன் இருந்த நாகராஜை கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டு மருத்வவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை நாகராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. போக்ஸோவில் கைது செய்யப்பட்ட நாகராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. 35 வயது இளைஞரின் பதறவைக்கும் செயல்.!