அப்பாவி புருஷன்... தாகாத உறவை தட்டிக்கேட்ட கணவன்! கள்ளக்காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி! விசாரணையில் வெளிவந்த நடுங்க வைக்கும் பின்னணி...!!!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இளையராஜா கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவியுடனான தொடர்பை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா உள்ளிட்ட 3 பேரை சிறுபாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளையராஜா
வேப்பூர் அருகேயுள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இது விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியுடன் காதல்.. சிறுமியை தேடி வந்த காதலன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. போக்ஸோவில் தூக்கிய போலீஸ்.!
ஆனால் விசாரணையின் போது இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது செல்போன் அழைப்புகள், தொடர்புடைய நபர்களின் நடமாட்டம் மற்றும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மனைவியுடனான தொடர்பை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
அப்போது அஸ்வினிதாவுக்கும் இளையராஜாவின் சித்தி மகனான வெங்கடேசனுக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, மனைவியுடனான வெங்கடேசனின் தொடர்பு குறித்து இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வெங்கடேசன், இளையராஜாவை தாக்கியதில் அவர் மயக்கமடைந்ததாகவும், பின்னர் தனது நண்பர் செல்வத்தின் உதவியுடன் அவரை ஒரங்கூர் பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து போல காட்ட முயன்றதாக தகவல்
மயக்க நிலையில் இருந்த இளையராஜாவை கிணற்றில் வீசி கொலை செய்த பின்னர், அவரது இருசக்கர வாகனத்தையும் அங்கேயே நிறுத்தி, அவர் தவறி கிணற்றில் விழுந்தது போல காட்சியை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், நடந்தவற்றை வெங்கடேசன் அஸ்வினிதாவுக்கு உடனுக்குடன் தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இளையராஜா கொலை வழக்கில் வெங்கடேசன், அவரது நண்பர் செல்வம் மற்றும் இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா ஆகிய 3 பேரையும் சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வேப்பூர் Murder Case தொடர்பான கூடுதல் தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING : போடு வெடிய.... குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.3000 வரவு....! சற்றுமுன் முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!