தமிழகம்

இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

oldman abused young child

கோவையில் 26 வயது பெண் கணவரை பிரிந்த நிலையில், தனது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் வேலைக்கு செல்வதால், தனது பெண் குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவரை சம்பளம் கொடுத்து வேலைக்கு சேர்த்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 13ம் தேதி குழந்தையைப் பராமரித்துவந்த பெண் வெளியூருக்கு சென்றுள்ளார். ஆனாலும் குழந்தையை வழக்கம் போல் அவரது வீட்டில் விட்டு விட்டு அப்பெண் பணிக்கு சென்றுள்ளார். பணிமுடிந்து வந்து குழந்தையை வாங்கியபோது, குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதனையடுத்து குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

விசாரணையில் சிறுமையை பராமரிக்கும் பெண் ஊருக்கு சென்ற நிலையில் அவரது கணவரும், அவரது நண்பர் சக்திவேல், 52, என்பவரும், வீட்டில் மது அருந்தியுள்ளனர். மது அருந்திய பின் பெண்ணின் கணவர் வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் சக்திவேல் அந்த குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையடுத்து அந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


Advertisement