சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!


old man sexual torture to young girl

சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்த பாலமுருகன் என்ற 22 வயது நிரம்பிய வாலிபர் அதே பகுதியில் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன், அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும், இதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இந்தநிலையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.