தமிழகம்

மருத்துவமனை வாசலில் வாயில் நுரை தள்ளி 4 மணி நேரம் கிடந்த முதியவர்..! யாரும் கண்டுக்கல..! 4 மணி நேரம் வாசலில் கிடந்த சடலம்.!

Summary:

Old man died at thirupur GH who came for treatment

சிகிச்சைக்காக வந்த முதியவர் கவனிக்க யாரும் இல்லாத நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். நீண்ட நேரமாக மருத்துவமனை நுழைவு வாயில் அருகே அமர்ந்திருந்த அவரை யாரும் கண்டுகொள்ளத்தநிலையில் மதியம் சுமார் 1 மணியளவில்  வாயில் நுரை பொங்கி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொரோனா பயம் மக்கள் மத்தியில் இருப்பதால் யாரும் அந்த முதியவர் அருகே செல்லவில்லை, இதனை அடுத்து சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் 4 மணி நேரம் கழித்து மருத்துவர் ஒருவர் அந்த முதியவரை சோதனை செய்து, அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையிலும் மருத்துவமனை ஊழியர்கள் முதியவரின் உடலை எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமானதால் 4 மணி நேரத்திற்கு பிறகு முதியவரின் உடலை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத அந்த முதியவர் யார்? எந்த ஊர் என்ற எந்த தகவலும் இல்லாத நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


Advertisement