#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
வித்தியாசமாக நடைபெற்ற திருமணம்! நோ சொன்ன அதிகாரிகள்! முடித்துவைத்த திருநங்கைகள்!
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் அருண் குமார் (22) என்பவரும் ,
ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா (20) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அருண்குமார் ரயில்வேயில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீஜா தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். திருமணத்திற்கு பிறகு ஆணுக்கும், திருநங்கைக்கும் இடையே நடந்த திருமணத்தை பதிவு செய்ய முடியாது என கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருநங்கைகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இதைப்பற்றி கூறிய திருநங்ககைகள் திருநங்கைகள் திருமணம் செய்துகொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம்கூட, சென்னையில் வடபழநி முருகன் கோயிலில் "சைலு" என்ற திருநங்கைக்கும் செல்வமுருகன் என்ற ஆணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது என தங்களது கருத்துக்களை கூறினர்.
மேலும் திருமணம் செய்துவைக்க குருக்கள் வராததால் திருநங்கைகளே தாலியை முருகன் காலடியில் வைத்து, அச்சத்தை தூவி திருமணத்தை முடித்து வைத்தனர்.