பாத்திரத்தில் விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை! திடீரென சிக்கிய தலை! 2 மணி நேர போராட்டம்... அதிர்ச்சி சம்பவம்!
ஒடிஷா மாநிலம் மலகான்கிரி மாவட்டத்தின் கொருகொண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் தித்தமர் என்பவர், வெள்ளிக்கிழமை காலை சந்தையில் இருந்து புதிய ஸ்டீல் பாத்திரம் ஒன்றை வாங்கி வீட்டிற்கு திரும்பினார்.
விளையாடிய சிறுவன் பாத்திரத்தில் சிக்கல்
அவர் வாங்கி வந்த பாத்திரத்துடன் அவரது 3 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தார். அதில் தலையை வைக்க முயன்ற சிறுவன், திடீரென அதற்குள் சிக்கிக் கொண்டார். பெற்றோர் பலமுறை முயற்சி செய்தும் சிறுவனின் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
தீயணைப்பு வீரர்கள் மீட்பு முயற்சி
உடனே, சிறுவனை கொருகொண்டா தீயணைப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்று உதவி கேட்டனர். ஆனால், சம்பவம் சிக்கலானதாக்கையால், மலகான்கிரி தீயணைப்பு நிலையத்திற்கு மாற்றினர். அங்கு தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக உழைத்து, பாத்திரத்தை வெட்டி சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர்.
இதையும் படிங்க: வீட்டின் உள்ளே கதவை பூட்டி மாட்டிகொண்ட குழந்தை! கேஸ் அடுப்பில் குக்கர், கொதிக்கும் வெந்நீர்! 1 மணி நேரமாக தவித்த தாய்! திக் திக் நிமிடம்...
சமூக வலைதளங்களில் பாராட்டு
இந்த மீட்பு நடவடிக்கையின் போது சிறுவனுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தீயணைப்பு வீரர்களின் நேர்த்தியான செயல்பாடு, பொறுப்பு மற்றும் திடமான செயல்திறனை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நம்பிக்கையை மீட்ட ஒரு செயல்திறன்
இந்த மீட்பு நடவடிக்கை, அவசர நிலைகளில் தீயணைப்பு துறையின் முக்கியத்துவத்தையும், அவர்களின் சேவையின் மீதான நம்பிக்கையையும் மேலும் வலிமைப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிவன் கோவிலுக்குள் நுழைந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு! தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!