மாணாக்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! ஆடிட்டர் படிப்புக்கு இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்.!

மாணாக்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! ஆடிட்டர் படிப்புக்கு இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்.!


now-10th-class-completed-students-will-study-ca

சி.ஏ. தேர்வு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம் என இருந்தது. அது தற்போது 10 ஆம் வகுப்பு படித்தவர்களும் எழுதலாம் என கூறப்பட்டு உள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டய கணக்காளர் படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என பட்டயக் கணக்காளர் மையம்(இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா) தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஏ எனப்படும் பட்டய கணக்காளப் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என தெரிவித்துள்ளது. 

ca

இந்த புதிய நடைமுறை இந்தாண்டே அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாடநெறிக்கான தற்காலிக சேர்க்கை  12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்தவுடன் மட்டுமே முறைப்படுத்தப்படும் என ஐ.சி.ஏ.ஐ.யின் தலைவர் அதுல் குமார் குப்தா கூறியுள்ளார்.