சினிமா

சுஷாந்த் சிங் இல்லாமல் தோனி இல்லை! தோனி 2 திட்டம் கைவிடப்பட்டது!

Summary:

No plan to dhoni part 2

சுஷாந்த் சிங் மரணமடைந்தால் தோனி இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக தயாரிப்பாளர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சுஷாந்த் சிங்கின் மரணம் இந்திய அளவில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சுஷாந்த் சிங்கின் கடுமையான உழைப்பின் காரணமாகவே அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. "M.S. Dhoni: The Untold Story" படத்தில் தோனியின் இளம் வயது முதல் அவர் இந்தியாவுக்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று சாதித்தது வரை படமாக்கி இருந்தனர் படக்குழுவினர். 

இந்தநிலையில், சுஷாந்த் சிங் மரணமடைந்து விட்டதால், அவர் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பதற்கு ஆளே இல்லை என்றும் அதனால் தோனி 2 படம் எடுக்கும் முடிவை கைவிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.


Advertisement