அரசியல் தமிழகம்

ஒருத்தரும் ஓட்டு போட வரவில்லை! ஆடிப்போன தேர்தல் ஆணையம்! அதிர்ச்சி காரணம்!

Summary:

No one came for election

 

தமிழகம் முழுவதும் நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நாளான நேற்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராம மக்கள் வாக்களிப்பதற்காக அங்குள்ள பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டது சுமார் 537 வாக்காளர்களை கொண்ட அந்த கிராமத்தில் வாக்குப்பதிவு நேரம் துவங்கிய நேரத்தில் இருந்து யாரும் வாக்களிக்க வரவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ள கட்சி காரர்கள் கூட  பூத் ஏஜென்ட் பணிக்கு வரவில்லை. தேர்தல் பணிக்காக வந்தவர்கள் மட்டுமே வாக்குசாவடியில் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து வாக்குசாவடி அதிகாரிகள், அப்பகுதி மக்கள் வாக்களிக்க வராதது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்பு தாது உருக்கு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த தொழிற்சாலைக்கு  அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஆலை மூடப்படவில்லை. இதனால் அவர்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றியதோடு தேர்தலில் ஓட்டுப்போடுவதில்லை எனவும் முடிவு செய்தனர். அதன் காரணமாகவே அப்பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும்  அப்பகுதி மக்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், பொதுமக்கள் மனம் மாறவில்லை. ஆலையை மூடினால்தான் வாக்களிப்போம் என திட்டவட்டமாக கூறினர். தொடர்ந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதி வரையில் எந்த பலனும் இல்லை. கிராம மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து விட்டனர்.


Advertisement