நெத்தியடி! நாய்கறியை பற்றி படிச்ச நீங்க கண்டிப்பா இத பாத்திருக்க மாட்டீங்க! கஜா புயலின் கோரத்தை பாருங்க

நெத்தியடி! நாய்கறியை பற்றி படிச்ச நீங்க கண்டிப்பா இத பாத்திருக்க மாட்டீங்க! கஜா புயலின் கோரத்தை பாருங்க



no media about gaja

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்னும் மின்சார வினியோகம் வழங்கப்படவில்லை. மக்கள் குடிநீருக்காகவும், உணவிற்காகவும், அடிப்படை தேவைகளுக்காகவும் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

புயல் பாதித்த 5 நாட்களுக்கு பிறகுதான் அதனைப் பற்றிய செய்திகள் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளன. இப்பொழுதுதான் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றது. இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

no media about gaja

புயல் அடித்த அன்றே தொலைத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது குறைகளை வெளியில் சொல்லமுடியாமல் தவித்து வந்தனர். ஆனால் ஒரு சில கிராமங்களில் இருந்து கிடைத்த தகவலை வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களால் தான் வெளியில் தொடர்பு கொள்ள முடியவில்லை; ஆனால் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் மூலம் புயல் எங்கு எல்லாம் கடந்து செல்கின்றது என்ற செய்தி வெளியாகிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் அதன் பாதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள யாரும் பெரிதாக விரும்பவில்லை. மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளவும் யாருக்கும் மனமில்லை. இதனால் அந்த மக்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் துயரங்கள் வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விட்டது.

no media about gaja

இந்த கஜா புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிர் இழந்தன. விவசாயிகளில் செல்ல பிராணிகளாக ஆடு, மாடு கோழி வாத்து என பல பிராணிகள் புயலில் சிக்கி பரிதாபமாக இறந்தன. இதனைப்பற்றி வெளி உலகிற்கு எடுத்துச் சொல்லாமல் சென்னையில் நாய் கறி பிடிபட்டதை மட்டும் பெரிய செய்தியாக வெளியிட்ட ஊடகங்களுக்கு மிகப்பெரும் நெத்தியடியாக ஒரு செய்து முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

"நாய்கறியை காசாக்கி மனிதனை ஏமாத்துனதை போட்டுக்காட்டின டிவி மீடியா இதை ஏன்டா காட்டலை,,,, இதுதான்டா இழப்பு அது குற்றம்டா" என அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.