தமிழகம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவிக்கு இப்படி ஒரு வாலிப ரசிகனா?

Summary:

nirmaladevi fan in court

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை பாலியல் தொடர்பான தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவர் தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

இந்தநிலையில்  நேற்று விசாரணைக்கு வரவேண்டிய நிர்மலாதேவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விடுப்பு மனு அளித்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர் உசிலம்பட்டியைச்சேர்ந்த அன்பழகன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி எப்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு வருவாரோ, அப்போதெல்லாம் அவரை பார்க்க அங்கு வந்துவிடுவாராம்.

நிர்மலாதேவி போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் வேனில் ஏறி செல்லும்வரை அவர் அங்கேயே நின்று நிர்மலாதேவியை பார்த்து கொண்டே இருப்பாராம்.
 
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நான் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர், அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை பற்றிய செய்தியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் தான் வரும், அவர் எனக்கு சகோதரி என அன்பழகன் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றும் நிர்மலாதேவி நீதிமன்றத்துக்கு வந்திருப்பார் என்று நினைத்து வந்துள்ளார் அன்பழகன். ஆனால் நிறமலாதேவி உடல்நிலை கோளாறால் வராததால், ஏமாற்றம் அடைந்த அன்பழகன், ஏற்கனவே நிர்மலாதேவி தியானம் செய்த இடத்தில் அமர்ந்து கண்களை மூடி அவரும் தியானம் செய்தார். நிர்மலாதேவி இல்லாததால் அவருக்காக நான் தியானம் செய்கிறேன் என அன்பழகன் கூறினார்.


Advertisement