தமிழகம்

120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி.! சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

திருமணமான சில மாதத்தில் உயிரிழந்த கணவன்.! அவர் சகோதரரை மறுமணம் செய்து கொண்ட மனைவி.! சில நாட்களில் காத்திருந்த பேரதிர்ச்சி.!

மதுரை மாவட்டம் பாறைப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கல்லூரி மாணவி மாளவிகாவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாளவிகா குடும்பத்தினர், 120 சவரன் தங்கம் மற்றும் 10 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் பிரபாகரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திருமணமான சில மாதங்களில் வாழ்க்கையை இழந்த மாளவிகா தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு சீதனமாகக் கொடுத்த நகை மற்றும் பணத்தையும் பெண் வீட்டார் திரும்பி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரதட்சணையாக வழங்கப்பட்ட 120 சவரன் நகையையும், 10 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்ற நினைத்த பிரபாகரன் குடும்பத்தினர். பிரபாகரனின் தம்பியான பிரகாஷ் என்பவரை மாளவிகாவுடன் செல்பேனில் மூலம் பேசி காதல் வலையில் விழ வைத்துள்ளனர். பிரகாஷின் ஆசை வார்த்தைகளை நம்பி மாளவிகாவும் காதலில் விழுந்துள்ளார்.

ஆனால் இவர்களின் காதலுக்கு மாளவிகா பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோருக்கு தெரியாமல் பிரகாஷை கோவிலில் வைத்து மாளவிகா திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணமான சில மாதங்களில் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து பெண் வீட்டார் கலவல்நிலையத்தில், தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரகாஷ் வீட்டில் தனது மக்களுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாகவும் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பிரகாஷ் மற்றும் அவரது தந்தை இருவரையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement