தமிழகம்

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்! தமிழக அரசு உத்தரவு!

Summary:

New rule for come from other state

தமிழகத்துக்கு வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது உள்பட புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் மூலமாக குறிப்பிட்டுள்ளார்.  

அதேபோல் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டுமானால், மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் பாஸ் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்குள் வர வேண்டுமானால், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த பாஸ்களை பெற்றிருக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் இருந்து வரும் தனிநபர் ஒவ்வொருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருவோரைத் தவிர மற்றவர்களை 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைக்க கலெக்டர்கள் வழிமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement