ஏழை மாணவர்கள் பயனடைய தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி!. மாணவர்களுக்கு சென்றடையும் வரை பகிரவும்!.

ஏழை மாணவர்கள் பயனடைய தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி!. மாணவர்களுக்கு சென்றடையும் வரை பகிரவும்!.



new-plan-for-poor-student

தமிழக அரசுக்கும்,பள்ளிக் கல்வித்துறைக்கும், பெற்றோர்கள் அனைவரும் நன்றி சொல்லும் அளவுக்கு புதிய வசதியினை செய்துள்ளனர். இது கிராமப்புற ஏழைப் பிள்ளைங்களுக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

அதாவது 11 ஆம் வகுப்பின் புதிய வேதியியல் புத்தகத்தில் உள்ள கடினமான, முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையாக புரியும் வகையில், நன்றாக விளக்கி வீடியோ காட்சிகளாக பதிவு செய்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இனி எந்த மாணவ மாணவியர்களும் பணத்தை கொடுத்து டியூசனுக்கு போக தேவை இல்லை. வகுப்பறையில் ஆசிரியர் நடத்துவது புரியவில்லை என்றோ, வகுப்பறைக்கு ஆசிரியரே வரவில்லை என்ற கவலை யாருக்கும் வேண்டாம்.

அந்த பதிவினை ஒன்று அல்லது இரண்டு தடவை பார்த்தாலே போதும், எளிதாக புரிந்துவிடும். இதனை "TN சிஸ்ரட்" என்ற யூ டியூப்  பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இது இலவசமாக கிடைப்பதாலோ என்னவோ யாருக்கும் சென்றடையவில்லை. முக்யமாக கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் போய்ச் சென்றடையவே இல்லை. மேலும் டியூஷன் வருமானத்திற்காகவும் இதை பலபேர் கூறுவதே இல்லை.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் டியூஷன் நடத்தும் ஆசிரியர்களே இதை பார்த்துவிட்டு தான் டியூஷன் எடுக்கிறார்கள் என கூறுகின்றனர். எனவே தயவு செய்து இதை படித்தவர்கள் ஏழை மாணவர்களுக்கு உதவுமாறு எங்கள் Tamil Spark -செய்தியின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/playlists