காதல் திருமணம் செய்த பெண் ஒரே மாதத்தில் மர்ம மரணம்.. பாஸ்தா பாய்சன் ஆனதா? காதல் கணவனின் சதியா?..!

காதல் திருமணம் செய்த பெண் ஒரே மாதத்தில் மர்ம மரணம்.. பாஸ்தா பாய்சன் ஆனதா? காதல் கணவனின் சதியா?..!
பெண்மணி கடந்த ஜூன் 13-ல் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், ஜூலை 13-ல் மர்ம மரணம் அடைந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூரை சார்ந்தவர் பிரதீபா. இவரின் காதலர் விஜயகுமார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணத்திற்கு பின்னர் அன்னியூரில் வசித்து வந்துள்ளனர்.
நேற்று நண்பர்களுடன் சுற்றுலா சென்ற புதுமண ஜோடி, திருவாமாத்தூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் பாஸ்தா வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளது. இரவு நேரத்தில் உணவு செரிமானம் ஆகாததால் பிரதீபா வாந்தி எடுக்கவே, உடனடியாக சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்தது விசாரணை துரிதப்படும்.