தடபுடலாக நடைபெற்ற திருமணம்! அடுத்தடுத்தாக உயிரிழந்த மணமகனின் பெற்றோர்கள்! வெளியான தகவலால் மரணபீதியில் உறவினர்கள்!

தடபுடலாக நடைபெற்ற திருமணம்! அடுத்தடுத்தாக உயிரிழந்த மணமகனின் பெற்றோர்கள்! வெளியான தகவலால் மரணபீதியில் உறவினர்கள்!



new-married-groom-parents-dead-by-affecting-corono

ஹாவேரி மாவட்டம், ரெனபென்னுர் மாருதி நகரில் அமைந்துள்ள மௌனீஸ்வர் என்ற கோவிலில் கடந்த மாதம் 29ம் தேதி  27 வயதுமிக்க இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த திருமணத்தில்,ரெனபென்னுர் எம்.எல். ஏ அருண்குமார் அவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஜூலை 4ம் தேதி மணமகனின் 55 வயதுமிக்க  தந்தைக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு  பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஜூலை 7ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மணமகனின் தாயாரும்  கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஜூலை 11ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த  உயிரிழப்பால்  குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

corono
இந்த நிலையில் அதிகாரிகள் திருமணத்தில் கலந்துகொண்ட 37 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.  இதில் புதுமண தம்பதிகள் உட்பட 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் 14 நாட்கள்  தனிமைப்படுத்திக் கொள்ளவும், பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்