தமிழகம்

தேயிலை தோட்டத்தில் வேலை செய்த புதுமண தம்பதி!. கதவை திறந்து பார்த்த சக ஊழியர்கள் பேரதிர்ச்சி.!

Summary:

உதகை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த புதுமணத் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உதகை அருகே மேலூர் ஒசஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் தயானந்தன் இவருக்கு சமீபத்தில் தான் வினோதினி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதிகளான இவர்கள் இருவரும் உதகை அருகே சோலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர். மேலும் அவர்க இருவரும் தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் குடியிருப்பிலேயே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் தயானந்தனின் வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து சந்தேகமடைந்த சக ஊழியர்கள் தயானந்தனின் வீட்டு கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த  சக ஊழியர்கள்  எஸ்டேட் நிர்வாகத்துக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமாகி 6 மாதங்கள்கூட முடிவடையாத நிலையில் இளம்தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement