தமிழகம்

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்.! தமிழக அரசு அதிரடி.!

Summary:

New law to eradicate rowdies

ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். அதேபோல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி கும்பல்கள் குறித்த விவரங்களையும், அவர்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் விளக்கமளிக்க டி.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல் தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடி குண்டு வீசப்பட்டதால் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இந்தநிலையில், ரவுடிகளால் போலீஸ் தாக்கப்படுவது வருத்தமளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகளும் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு முன் நின்று உதவ வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.


Advertisement