நாளை முதல் இ-பதிவு முறையில் அதிரடி மாற்றம்!! தமிழக அரசு வெளியிட்டுள்ள அடுத்த அதிரடி திட்டம்!!

நாளை முதல் இ-பதிவு முறையில் அதிரடி மாற்றம்!! தமிழக அரசு வெளியிட்டுள்ள அடுத்த அதிரடி திட்டம்!!


new-e-register-rule-from-may-25th

நாளைமுதல் இ-பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.

 தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் முதல் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் தமிழக அரசு பல்வேறு நடைமுறைகளை வகுத்துள்ளது.

இந்நிலையில் வரும் மே 25 முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது எனவும், மே 25 முதல் தங்கள் ஊழியர்களை அழைத்துச்செல்ல தொழிற்சாலைகள் வாகன ஏற்பாடு செய்யவேண்டும் எனவும், அந்த வாகனங்கள் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 25 முதல் தொழிற்சாலைகள் இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அழைத்து வர 4 சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்து கொள்ளவும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது