அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
புதுமணப்பெண், மாப்பிள்ளை கூட்டத்தில் விழுந்து சாவு.. ஜோடியா போய்ட்டீங்களே.? - கதறும் உறவினர்கள்.!
நேற்று கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்னமும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பேரணியில் குழந்தைகள் உட்பட பலரும் மூச்சு திணறி மயங்கி உயிரிழந்து இருக்கின்றனர். இதில், அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த புது மணப்பெண் கோகுல ஸ்ரீ (24 வயது) மற்றும் புது மாப்பிள்ளை ஆகாஷ் (24 வயது) ஆகிய இருவரும் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஆகாஷ் கரூரைச் சேர்ந்தவர்.
இருவரும் வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு, விஜயின் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். உறவினர்களின் வீட்டு மாடியில் தான் இருக்கிறோம் என்று பெற்றோர்களிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்த அந்த ஜோடி இறங்கி வரும்போது மிதிபட்டு இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மலேசியாவிற்கு ஹனிமூன் சென்ற ஜோடி, பிணமாக திரும்பிய கொடூரம்.. கதறி துடிக்கும் உறவினர்கள்.!

மாலை 06:30 மணிக்கு அவர்கள் தன் வீட்டினருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே ஜோடியாக இறந்து விட்டது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பெண் கோகுல ஸ்ரீ கல்லூரி ஒன்றில் வேலை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் பேரணியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்றையும் தன் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டது அவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "இதுக்காகவா கல்யாணம் பண்ணினோம்..." அம்மாவுடன் சென்ற காதல் மனைவி.!! இளைஞர் எடுத்த விபரீத முடிவு.!!